பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் வெளியான 2.0 படத்தில் நடித்திருந்தார்.
இவருடைய நடிப்பில் கடந்த 24ம் தேதி வெளிவந்த திரைப்படம் செல்ஃபி. இந்த படம் படுமோசமான வசூலை எட்டியுள்ளது.

சுமார் 80 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான இப்படம் இதுவரை 7 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.
அக்ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில் இந்த படமும் தோல்வி அடைந்துள்ளது.