சினிமாவை விட்டு விலகும் நயன்தாரா?

நயன்தாரா 2005-ல் ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மேலும் அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

கடந்த ஆண்டு நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அக்டோபர் மாதம் வாடகைத்தாய் மூலம் நயன்தாரா இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டார்.

நயன்தாரா தற்போது இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படங்களை விரைவாக முடித்து கொடுத்துவிட்டு சினிமாவை விட்டு விலகப்போகிறார் என்றும், நடிப்பதை நிறுத்தினாலும் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து படங்கள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் நயன்தாரா தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.

RELATED ARTICLES

Recent News