தங்களது நாட்டை வல்லரசு நாடாக மாற்றும் முயற்சியில், அமெரிக்காவும், சீனாவும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு படி மேலே சென்ற சீனா, உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளை கண்காணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனை அறிந்த ஜப்பான் அரசாங்கம், தங்கள் நாட்டின் வான்வெளியில் பறக்கும் பொருட்களை அனுப்புவதை நிறுத்துமாறு சீனாவிடம் கூறியிருந்தது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஹமாமட்சு என்ற நகரில் உள்ள என்ஷு கடற்கரையில், ராட்சத அளவிலான ஒரு மர்ம உலோக உருண்டை கரை ஒதுங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், அங்கு வந்த காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன், அந்த உலோக உருண்டையை ஆய்வு செய்தனர்.
அதில், அது வெடிக்கும் தன்மை அற்ற உலோக உருண்டை என்பதை நிபுணர்கள் உறுதி செய்தனர். ஆனால், இந்த மர்ம மர்ம பொருள் என்ன என்பது குறித்தும், இது எங்கிருந்து வந்தது என்றும், தற்போது வரை கண்டறியப்படவில்லை. உளவு பார்ப்பதற்காக சீனா அனுப்பிய உலோகமா இது என்றும் ஜப்பான் நாட்டினர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.