பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீர் மரணம்..!

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57.

நடிகர் மயில்சாமி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்தார். இவர் 1984ல் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த இவர் சிறு சிறுவேடங்கள், நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரம் என 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விவேக், வடிவேலு உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் மயில்சாமி நடித்திருக்கிறார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். சினிமாவை தாண்டி பொதுநலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் முன்பே அவரின் உயிர் பிரிந்துவிட்டது.

RELATED ARTICLES

Recent News