நானும் காமெடியன் தான் எனக் கூறிக் கொள்பவர் நடிகர் கூல் சுரேஷ். காக்க காக்க, இனிமேல் இப்படித்தான், நண்பேண்டா ஆகிய சொற்ப படங்களிலே நடித்த இவர், பெரிய ஹீரோக்கள் படங்கள் வெளியாகும் நேரத்தில் முதல் ஆளாக விமர்சனம் செய்துவிடுவார்.
அந்த வகையில் செல்வராகவன் நடிப்பில் நேற்று வெளியான பாகசூரன் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பெண் ஒருவரின், தோல் மீது கை போட்டு முத்தம் கேட்டுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண், சார் என்னை விட்டுடுங்க என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். உடனே நிலைமையை சுதாரித்துகொண்ட கூல் சுரேஷ் அந்த பெண் எனக்கு தங்கை மாதிரி என்று அந்தர் பல்டி அடித்துவிட்டார்.