சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். இதையடுத்து தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், அண்மைக்காலமாக தொடர் பிரச்சனையை சந்தித்து வருகிறார்.
அதாவது கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். பின்னர் பிரபல இந்தி பாடகர் பல்நிந்தர் சிங் தன்னிடம் மோசடி செய்துவிட்டதாக கூறி கைது செய்ய வைத்தார். இந்த நிலையில், அமலாபால் மன அமைதிக்காக ஆன்மிக பயணம் செய்து வருகிறார்.
அந்த வகையில் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். தற்போது இந்தோனிசியா பாலி தீவில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றுள்ளர். அங்கு இவர் தியானம் செய்வது போன்ற புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் அமலாபால் சினிமாவை விட்டு விலகுகிறாரா..? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.