இயக்குனர் முத்துகுமார் உருவாக்கத்தில் கடந்த 26-ஆம் தேதி வெளியான வெப் சீரிஸ் அயலி. பெண் கல்வியை மையமாக கொண்டு உருவான இத்தொடரில், அபிநட்சத்திரா, அனுமோள், மதன் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்தனர்.
படம் வெளியானது முதலே ரசிகர்ளிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே படத்தின் இயக்குனர் முத்துகுமாரை அழைத்து, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார். மேலும் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இவர், அயலி வெப் சீரிஸ் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று, படத்தின் இயக்குனர் முத்துகுமாருக்கு பெரியார் சிலை அளித்து பாரட்டினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.