சோசியல் மீடியாக்களில் வீடியோக்கள் பதிவிட்டு பிரபலம் அடைந்தவர் ஓட்டேரி சிவா. தன்னுடைய வெகுளித்தனமான செயல்களால் மக்களின் மனங்கவர்ந்த இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் முதல் 2 எபிசோடுகளில் இவர், நீக்கப்பட்டு அவருக்கும் பதிலாக டைகர் கார்டன் தங்கதுரை எண்ட்ரி கொடுத்தார். இதற்கு காரணம் சிவா குடித்துவிட்டு வருவதும், ஹூட்டிங் ஸ்போட்டில் அநாகரிகமான செயல்களுமே என்று செய்திகள் பரவி வந்தன.
தற்போது இதுகுறித்து பேசிய ஓட்டேரி நரி, நான் இனி குடிக்கமாட்டேன் என்றும், தன்னுடைய வளர்ச்சி பிடிக்காமல சிலர் பொறாமையால் அப்படி கூறுகின்றனர் என மறுப்பு தெரிவித்துள்ளார்.