கடந்த சில மாதங்களாக பல்வேறு தொழிநுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. ட்விட்டர் மற்றும் மெட்டா ஆகிய முக்கியமான டெக் நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருக்கும் தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது.
இந்நிலையில் டெல் டெக்னாலஜிஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் தேவை குறைந்து வருவதால், சுமார் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பங்குச்சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் நிலைமையில் உள்ளதால் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்ற கேள்விக்குறியுடன் இருக்கிறது என நிறுவன இணை-தலைமை இயக்க அதிகாரி ஜெப் கிளார்க் கூறியுள்ளார்.