பகாசுரன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குனர் மோகன் ஜி

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற படங்களின் மூலம் பிரபலமான இயக்குனர் மோகன் ஜி தற்போது ‘பகாசுரன்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் செல்வராகவன், நட்டி நடராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் செல்வராகவன் கொஞ்சம் மிரட்டலான தோற்றத்தில் சிவ பக்தர் போல காட்சியளித்திருந்தார்.

இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி ‘பகாசுரன்’ படம் வரும் பிப்ரவரி மாதம் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News