கற்களால் காரை சேதப்படுத்திய நடிகரின் மனைவி மீது வழக்கு பதிவு..!

மாதவரம், சாஸ்திரி நகர், எக்ஸ்டென்ஷன் இரண்டாவது குறுக்கு சாலை பகுதியில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்தியா வசித்து வருகிறார். இவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

எதிர் வீட்டில் இருக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்த நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்தியா நேற்றிரவு எதிர் வீட்டு உரிமையாளரின் காரை கற்களால் சேதப்படுத்தி உள்ளார். இதனால் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் மாதவரம் போலீசார் நடிகர் தாடி பாலாஜி மனைவி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிறர் சொத்துக்கு சேதம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News