பிரபல காமெடி நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனோபாலா இயக்குனர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி, ஒரு காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில் நடிகர் சங்க தலைவர் பூச்சி முருகன் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.