சக்சஸ் பார்ட்டியில் அத்துமீறிய பிரபல நடிகர்!

கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில், வெளியான திரைப்படம் வீரசிம்மா ரெட்டி. பில்டப்பான சண்டை காட்சிகள், பஞ்ச் டயலாக்குகள் என பாலகிருஷ்ணாவின் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், அம்மாநிலத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் தான், பாலகிருஷ்ணாவின் வரலாற்றிலேயே அதிகமாக வசூலித்த திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் வெற்றி விழா, தயாரிப்பாளர்கள் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், படத்தின் கதாநாயகன் பாலகிருஷ்ணா, கதாநாயகி ஹனி ரோஸ் உட்பட படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில், நடிகர் பாலகிருஷ்ணா, நடிகை ஹனி ரோஸ் உடன் இணைந்து, மது அருந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இவர் நடிகர் மட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதால், சமூக ஆர்வலர்கள் அவரது நடவடிக்கையை விமர்சித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News