ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 240 பயணிகளுடன் கோவா நோக்கி வந்த சார்ட்டர் விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் அவசரமாக உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது: “அஷூர் விமான போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும் விமானம் (AZV2463) ஒன்று மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 4:15 மணிக்கு கோவாவின் டாம்போலி விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்க வேண்டும். இந்நிலையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக 12:30 மணிக்கு டாம்போலி விமானநிலையத்தின் இயக்குநருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாக, அவசர அவசரமாக உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.