பேண்ட் அணிந்தவாறே சிறுநீர் கழித்த பிரதமர் – வைரல் வீடியோ

வடக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானின் அதிபர் சல்வா கீர் மயர்டிட் (71) கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி புதிதாக கட்டப்பட்டிருக்கும் சாலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அந்நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசிய கீதத்தை பாடி கொண்டிருந்த அதிபர் சல்வா கீர் மயர்டிட் பேண்ட் அணிந்தவாறே சிறுநீர் கழித்துள்ளார். இந்த வீடியோவானது அங்கிருக்கு சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிபர் சிறுநீர் கழித்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டதாக கூறி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் 6 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News