சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நாகேந்திரனின் உடல் மீதான பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. கோர்ட் உத்தரவுப்படி, முன்னாள் ஸ்டான்லி மருத்துவரும் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் சாந்தகுமார் முன்னிலையில் இந்த பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.
மாதவரம் மேஜிஸ்ட்ரேட் தீபா, சட்டம் சார்ந்த தடயவியல் மற்றும் நச்சுயியல் துறைத் தலைவர் பிரியதர்ஷினி ஆகியோர் தலைமையில் மருத்துவ குழு பணியில் ஈடுபட்டுள்ளது. உடற்கூறாய்வை மருத்துவர் ராஜேஷ் மேற்கொள்ளவுள்ளார்.பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.