போதை மாத்திரை விற்பனை..! 4பேர் அதிரடி கைது..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் காட்பாடி ரயில் நிலையம் அருகே காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஒரு பெண் ஒரு சிறார் உட்பட 14 பேரை கைது சிறையில் அடைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த போதை மாத்திரை எப்படி கிடைத்தது..? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என நடத்தப்பட்ட சோதனையில்..? திகார் சிறை காவலர் என்பது தெரியவந்தது..? மேலும் இந்த விவகாரத்தில் பலருக்கு தொடர்புடையது தெரியவந்தது.

இதனை அடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில் பிரம்மபுரம் காவல் ஆய்வாளர் ஏழுமலை உதவி ஆய்வாளர் மணிகண்டன் கார்த்திக் செல்வன் ஆகியோர் தலைமையில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்குச் சென்று தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் விவகாரத்தில் தொடர்புடைய மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த நிகிதா ஹேமந்த் டோங்டி (26), கிரிஷ் டோங்டி (27), நிகில் ராஜேஷ் (34), சென்னை தரமணியை சேர்ந்த வினோத் குமார் (27) ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2,100 போதை மாத்திரைகள் மற்றும் 4 செல்போன்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மூன்று பேரை வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் நிகிதா ஹேமந்த் டோங்டி (26), என்ற பெண்ணை வேலூர் பெண்கள் தனி சிறையிலும் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News