நடிகர் தனுஷ், ராஜ்கிரண், நித்யாமேனன், அருண்விஜய், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் “இட்லிக்கடை”.
இந்நிலையில் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இட்லி கடை திரைப்பட பிரமோஷன் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் நடிகரும் இயக்குனருமான தனுஷ் நடிகர்கள் அருண் விஜய், பார்த்திபன் இளவரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள ஏராளமான தனுஷ் ரசிகர்கள் வருகை தந்தனர்.
அப்போது மேடையில் நடிகர் பார்த்திபன், இட்லிகடை செண்டிமெண்டல் படம் எனவும், தனுஷ் அவரது குழந்தைகளுக்கு மட்டும் அப்பா அல்ல; எங்க எல்லோருக்கும் அப்பா போல இருந்து புது புது ஆடைகளை எடுத்துக் கொடுத்துள்ளார்
ஆனால் அவர் ரொம்ப சாதரணமாக இருப்பார்; இட்லி சட்டியில் பயன்படுத்தும் உள்ள துணி போல வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து எளிமையாக வந்துள்ளார்.
தேசிய விருது பட்டியலில் தனுஷ் படம் இல்லாத போது தான் மற்றவர்களுக்கு தேசிய விருது கிடைக்கும் இல்லையென்றால் மற்றவனுக்கு கிடைக்காது என்றும், தேசிய விருதுபெற்ற G.V பிரகாஷ்க்கு வாழ்த்துக்கள் என்றார்
அப்போது மதுரை மல்லிகை குறித்து கேள்விக்கு பதிலளித்த நடிகர் பார்த்திபன்
அழகரை துலுக்கநாச்சியார் காதலித்ததாக ஒரு ஐதீகம், கதை கூறப்பட்டது அப்படிபட்ட வண்டியூர் பெருமாள் கோவிலில் உள்ள இஸ்லாமியரான துலுக்க நாச்சியாருக்கு மதுரை மல்லிகையை மத நல்லிணக்கத்திற்காக அணிவிக்க விரும்புகிறேன் என்றார்