நடிகர் தனுஷ், ராஜ்கிரண், நித்யாமேனன், அருண்விஜய், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் “இட்லிக்கடை”. இப்படத்தின் கதை சுருக்கத்தை பார்ப்பதற்கு முன் ஒரு சுவாரசிய தகவலை பார்ப்போம்..
கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இட்லிகடை ஆடியோ லாஞ்ச் விழாவில் பேசிய நடிகர் தனுஷ், பஸ்சுக்கு பணம் இல்லாததால் எனது தாய் 3 மாதம் கர்ப்பமாக இருந்தபடி 120 கிலோ மீட்டர் சொந்தகாரர்களை பார்க்க மதுரைக்கே நடந்தே வந்தார், அந்த மேடைதான் இந்த மேடை என இட்லி திரைப்பட விழாவில் சென்டிமெண்டாக பேசினார் நடிகர் தனுஷ்
ஜெயிக்கிறோமோ தோக்குறோமோ முதலில் சண்டை செய்ய வேண்டும் ஆனால் சண்டை அங்கு செய்யாதீர்கள் சண்டையை படிப்பில் செய்யுங்கள் உழைப்பில் செய்யுங்கள். சண்டை நமக்குள் இருக்க வேண்டும் மனதுக்குள்ளே இருக்க வேண்டும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என் ரசிகர்கள் விசில் அடித்திகொண்டும், கைதட்டி கொண்டும் மட்டும் இல்லாமல் உழைத்து மேல வர வேண்டும், என் வாழ்க்கையே அது தான் சுனாமிலேயே ஸ்விம்மிங் போட்டுக் கொண்டே தான் இருக்கிறேன், 16 வயதில் கேமரா முன் நிற்கும்போது இதெல்லாம் ஒரு மூஞ்சியா என கேட்டபோது ஆரம்பித்தது இப்போதும் ஸ்விம்மிங் தான் போட்டுக் கொண்டே இருக்கிறேன்.
என் ரசிகர் கிட்ட எனக்கு ரொம்ப பிடித்தது., என்றைக்கும் மாறாத நிரந்தரமான அன்பு தான் என இவ்வாறே பேசினார்..