சதுரங்கவேட்டை பட பாணியில் பண மோசடி..!! சிக்கிய தாய் மகன்..!!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஐயனூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வேலூர் கலால் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அவரது மகன் நித்திஷ் (வயது 25) என்பவர் பட்ட படிப்பு முடித்து விட்டு பணம் சம்பாதிப்பது எப்படி என்று சமூக வலைத்தளத்தில் கற்று கொண்டு உடன் படித்த நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் நட்பாக பழகி வந்துள்ளார்.

மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் பரிமாறி கொண்டு கிரிப்டோ கரன்சி, டிரேடிங், ஷேர் மார்க்கெட் என்று பல விதமான பெயர்களை பயன்படுத்தி 1மடங்கு பணம் போட்டால் அது வட்டியுடன் 2 மடங்காக கிடைக்கும், என கூறி பணத்தை முதலீடு செய்ய வைத்துள்ளார்.

அவரது வார்த்தையை நம்பி அவரது நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் பல பொய்கள் சொல்லி எப்படி எல்லாம் யாமாற்ற முடியுமோ அப்படி எல்லாம் யாமாற்று வேலை செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் நித்தீஷ்குமார்.

அப்பா இன்ஸ்பெக்டர் என்பதால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது., என்னை நம்பி பணத்தை முதலீடு செய்யுங்கள் என்றும் சிலரிடம் நம்பகத்தன்மையோடு பேசிய காரணத்தினால் அதை நம்பி பலரும் பணத்தை முதலீடு என்ற பெயரில் நித்திஷிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர்.

பின் பணத்தை திருப்பி கேட்டு அவர் தர மறுத்தால் ஏமாற்றத்தை உணர்ந்த சந்தோஷ்குமார் திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மாவட்ட குற்ற பிரிவு போலிசார் விசாரணையை தொடங்கிய நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பட்ட படிப்பு படித்த நிதிஷ்குமார் டெல்லிக்கு சென்று யூ.பி.எஸ்.இ தேர்வு எழுத ஆயுத்தம் ஆகி உள்ளார். அங்கு அவருக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த அஞ்சனா என்ற பெண் பழக்கம் ஆகி இருவரும் காதலித்து வரும் நிலையில் காதலிக்கு பண மழை கொட்டும் அலுவலகமாக கேலஸ்சி டிரேடிங்க் கம்பெனி என்று ஆரம்பித்து அதற்கு எம்.டி யாக அமர வைத்து அழகு பார்த்து வந்துள்ளார்.

மேலும் அவருடன் சேர்ந்து புதிய வாடிக்கையாளர்களை இந்த கம்பெனியில் முதலீடு செய்யுங்கள் என்று பல லட்சம் பணத்தை முதலீடு செய்ய தனது உடன் படித்த நபர்களை நிதிஷ் தூண்டி உள்ளார். அதனை நம்பி அவர்களும் பணத்தை போட்டு உள்ளனர்.

பின்னர் 1 வருட காலம் கடந்தும் எந்த பணமும் திரும்ப கிடைக்காத காரணத்தினால் இதனால் யாமாற்றம் அடைந்த நபர்கள் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் புகாரின் பேரில் நிதிஷ் குமாரை மாவட்ட குற்ற பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே நிதிஷ்குமார்மீது பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் இருந்ததால் இந்த வழக்கு சம்மந்தமாக சென்னையில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவரது தாயாரும் உடன் பட்டு இருப்பதால் அவரையும் விசாரணைக்காக போலிசார் அழைத்து சென்று உள்ளனர்.

அப்போது நிதிஷ் தாயார் மாலதி, மயங்கி விழுந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னரே அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தாய் மாலதி மற்றும் மகன் நிதிஷ்குமாரை போலிசார் கைது செய்து 69 லட்சம் மோசடி செய்த குற்றத்திற்காக சிறையில் அடைத்தனர்.

மேலும் நிதிஷ் குமாரின் காதலியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தாய் மகன் பண மோசடியில் ஈடுபட்டு கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

RELATED ARTICLES

Recent News