“தெரு நாய்களுக்கு உணவு அளிப்போருக்கு தொல்லை தொடர்பாக காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தேவையில்லை” என பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் மனிதர்களை கடிப்பது., துரத்துவது போன்ற அச்சுறுத்தும் செயலில் ஈடுபடுவதால்., தமிழக அரசு ஒரு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. அதாவது தெருநாய்களை கருணை கொலை செய்யலாம் எனவும்., உணவு அளிக்கக்கூடாது என அரசு அறிவித்திருந்தது.
அப்போது தெரு நாய்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும்., அதற்கு எதிராக மற்றொரு தரப்பினரும் கோஷமிட்டு, தங்களது கருத்துக்களை மாறி மாறி சமூக வலை தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதனிடையே தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குகள் நல ஆர்வலர்கள் பேரணி நடத்துவதும், தெரு நாய்களுக்கு உணவு அளிப்பதை தடுப்பவர்களுடன் வாக்குவாதம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் “புளூ கிராஸ் இந்தியா” அமைப்பு சார்பில் தமிழக காவல்துறையின் டிஜிபி வெங்கடராமனுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும்,
அதில் தெரு நாய்களுக்கு உணவு அளிப்பவர்களுக்கு சமீபத்தில் மிரட்டல்கள் வருவதாகவும் தொந்தரவு செய்யப்படும் சம்பங்கள் தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது போன்ற தொந்தரவுகளை தடுப்பது தொடர்பாக டிஜிபி அனைத்து காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கு பதில் மனு அளித்த உச்ச நீதிமன்றம், இது போன்ற குற்றங்கள் முகாந்திரம் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.