பாஜக அரசின் வாக்குமுறைகேடுகளையும் அதற்கு துணைபோகும் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து, நாடு முழுதும் வாக்குதிருடனே பதவி விலகு என்னும் மாபெரும் பிரசாரத்தை தமிழக காங்கிரஸ் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு தலைமையில், பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்கை பங்கேற்று கையெழுத்திட்டு இயக்கத்தை துவக்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி,
மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், வாக்குரிமை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுதும் ஒரு கோடி கையெழுத்தை பெற்று அதனை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சரத்குமார் அவரை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், திமுக, அதிமுக கட்சிகளில் இருந்து விலகி தனியாக கட்சி ஆரம்பித்த பின்னரே சரத்குமார் தற்போது பாஜகவில் இணைந்து இருப்பதாக விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர் தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கைகோர்த்து செயல்பட்டு வருவதாகவும், பாஜக அரசின் துணையோடு தான் தேர்தல் ஆணையம் வாக்குதிருட்டில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.