ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இஸ்லாமிய கூட்டமைப்பினர் கைது…!!

அருப்புக்கோட்டையில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இஸ்லாமிய கூட்டமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் உள்ள புதிய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு ரூ 8 கோடி மதிப்பில் புதிதாக ஸ்மார்ட் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டவும், இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து புறவழிச்சாலையை இணைக்கும் இ-3 சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நகராட்சியில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதால் புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து போராட்டம் நடத்துவதற்காக புதிய பேருந்து நிலையத்தின் முன்பு கூடிய இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள், மற்றும் அவர்களுக்கு ஆதரவாக கூடிய அனைத்து கட்சி நிர்வாகிகள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து ஜமாஅத் செயலாளர் சேக்உதுமான் அளித்த பேட்டியில்,

புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இ-3 சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் அதை மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக போராட்டம் நடத்த அறிவித்திருந்தோம். இனி வரும் காலத்தில் எங்களின் கோரிக்கைகளை கேட்டு எங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம் என பேசினார்.

RELATED ARTICLES

Recent News