பேரிஜம் ஏரி செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை- வனத்துறை அறிவிப்பு…!!

கொடைக்கானல் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப்பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை- வனத்துறை அறிவிப்பு…

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பேரிஜம் ஏரி அமைந்துள்ளது, இந்த பேரிஜம் ஏரியானது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது, இந்த பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு வனத்துறை அனுமதி சீட்டு பெற்று, அதற்குரிய கட்டணம் செலுத்தி பேரிஜம் ஏரி,மதிகெட்டான் சோலை,தொப்பி தூக்கி பாறை, பயர் வாட்சிங் டவர் உள்ளிட்ட மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக உள்ள இயற்கை எழில் காட்சிகள் கொண்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருமின்றனர்.

இந்நிலையில் இன்று இந்த பேரிஜம் ஏரிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகினை கண்டு ரசித்து வந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள ஒற்றை காட்டு யானை திடீரென பேரிஜம் ஏரிக்குள் இறங்கி தண்ணீர் அருந்த சென்றது, இதனை கண்டு மக்கள் அதிர்ச்சியடைத்தனர் .

பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்திற்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு ஆர்வத்துடன் ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர், இதனையடுத்து பேரிஜம் ஏரிக்கரை பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு இருப்பதால், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் .

நாளை முதல் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதித்து இருப்பதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்,இதன் காரணமாக சுற்றுலாப்பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது…

RELATED ARTICLES

Recent News