ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அதிமுக வினர் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்
கடந்த 5-ம் தேதி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து கட்சியில் இணைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு அதிமுக நிர்வாகிகள், அமமுக நிர்வாகிகள் கோபி நகரம் வணிகர்கள் சங்கத்தினர் என 200-க்கும் மேற்பட்ட கார்களில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்தும் . செங்கோட்டையன் அவர்களுக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த நிலையில் நாள்தோறும் தொடர்ந்து செங்கோட்டையனுக்கு ஆதரவு அதிகரித்து வருவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது