நகராட்சி பூங்கா இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து இருப்பதாக புகார் …!!

திருவள்ளூர் நகராட்சியில் 19-வது வார்டில் பூங்கா இடத்திற்கு தனிநபருக்கான அப்ரூவல் வழங்க லஞ்சம் பெற்றதாக நகரமைப்பு ஆய்வாளர் மீது கொடுத்த புகாரில் நடவடிக்கை இல்லை என்றும், சம்பந்தப்பட்டவர்கள் தன்னிடம் பேரம் பேசுவதாகவும் திமுக கவுன்சிலர் நகர் மன்ற கூட்டத்தில் பேசியதால் பரபரப்பு.

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 19ஆவது வார்டு பகுதியில் உள்ள நகராட்சி பூங்கா இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் தனி நபர் ஒருவர் திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நகர அமைப்பு ஆய்வாளராக பணியாற்றும் விஜயா என்பவரை அணுகியுள்ளார்.

லஞ்சமாக பணத்தை பெற்றுக் கொண்டு பூங்கா இடத்தை தனிநபர் இடமாக கட்டிடம் கட்டுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த திமுக கவுன்சிலர் தாமஸ் என்கிற ராஜ்குமார் நகர் மன்ற கூட்டத்தில் புகார் தெரிவித்தார்.

எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து எழுத்துப்பூர்வமாகவும் நிலத்தை தனி நபர் நிலமாக அப்ரூவல் செயததாக புகார் அளித்தார். ஆனால் நகராட்சி ஆணையர் தாமோதரன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் தாமஸ் என்கிற ராஜ்குமார் கடந்த கூட்டத்தில் நான் பேசிய குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுக்காமல் அதன் பிறகு எழுத்து பூர்வமாக கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ள நிலையில் பூங்கா இடத்திற்கு அப்ரூவல் வழங்கிய நபர் தன்னிடம் பேசியதாகவும், அப்போது ஏன் இந்த பிரச்சனையை பெரிதாக்குகிறீர்கள், நீங்கள் தான் இது குறித்து பேசி வருகிறீர்கள் என தெரிவிக்கின்றனர் என்றும், நான் நகர் மன்றத்தில் பேசியது, மற்றும் புகார் கொடுத்ததை அறிந்து என்னிடம் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் அவர் கேள்வியை எழுப்பினார்.

அப்போது நகரமைப்பு ஆய்வாளர் விஜயா என்பவருக்கு மெமோ கொடுத்திருப்பதாக அப்போது ஆணையர் தாமோதரன் தெரிவித்தார். மேலும் கட்டிட ஆய்வாளர் விஜயா மீது ஏற்கனவே திருநின்றவூர் மற்றும் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றிய போது முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் சென்றதாகவும் அதன் அடிப்படையிலேயே அவர் பணியிட மாற்றம் செய்து திருவள்ளூருக்கு வந்ததும் தெரியவந்தது. எனவே நகராட்சி கட்டிட ஆய்வாளர் விஜயா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கவுன்சிலர் கோரிக்கை விடுத்த சம்பவம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

RELATED ARTICLES

Recent News