சிலைக்கு மனு கொடுக்கும் போராட்டம்..!! வேதனையில் தூய்மை பணியாளர்கள்..!!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள ஈவெ.ரா மணி அம்மையார் சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்குவதை தமிழக அரசு கைவிட வலியுறுத்தியும் கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக 13 தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று ஐந்தாவது நாளாக சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் எதிரேயுள்ள ஈ.வெ.ரா மணி அம்மையார் சிலைக்கு மனு கொடுக்கும் படி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 3 தூய்மை பணியாளர்களுக்கு காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர்., அவர்களை கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், கடந்த ஐந்து நாட்களாக 13 தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருவதாகவும் மூன்று தூய்மை பணியாளர்கள் காவல்துறை கைது செய்யும் போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்..

நாங்கள் அறவழியில் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வந்ததாகவும் இன்று ஐந்தாவது நாளாக
ஈ.வெ.ரா மணி அம்மையார் சிலைக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்..

ஒவ்வொரு முறையும் போலீசார் தங்களை கைது செய்து சமுதாய கூட அடைக்கும் பொழுது தங்களை கழிப்பறியில் வைத்து அடைத்து வைத்து கொடுமை செய்வதாகவும், ஆபாச வார்த்தைகளால் பேசுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்…

ஒரு மாத காலமாக தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராடி வருவதாகவும் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்..

RELATED ARTICLES

Recent News