ஆட்டோ டிரைவரை கையால் தாக்கி கொலை செய்த சக ஆட்டோ டிரைவர்..!!

அரக்கோணத்தில் ஆட்டோ டிரைவரை கையால் தாக்கி கொலை செய்து கை, கால்களை கயிற்றால் கட்டி கிணற்றில் போட்ட சக ஆட்டோ டிரைவரை டவுன் போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் துரைசாமி நகரை சேர்ந்தவர் திலீப் குமார் (33 ) ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் ஓச்சலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் ( 25). சில நாட்களுக்கு முன்பு ராஜேஷின் ஆட்டோவை திலீப்குமார் எடுத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஏதோ ஓரிடத்தில் ஆட்டோவை இடித்துவிட்டு கொண்டு வந்து ராஜேஷிடம் கொடுத்துள்ளார்.ஆட்டோவை ஏன் இடித்து சேதப்படுத்தினாய் என்று கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரத்தில் திலிப்குமார் ராஜேஷை கையால் தாக்கியுள்ளார்.ஆத்திரமடைந்த ராஜேஷ் அரக்கோணம் எஸ். ஆர் கேட்டில் குடிபோதையில் படுத்து கொண்டிருந்த திலிப் குமாரை கையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் திலீப்குமார் இறந்து போனது தெரிந்ததும் தன்னுடைய ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஓச்சலத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் திலீப் குமாரின் கை, கால்களை கயிற்றால் கட்டி கிணற்றில் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாது போன்று வீட்டுக்கு சென்றுள்ளார்.

அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆட்டோவை சேதப்படுத்திய ஆத்திரத்தில் திலீப் குமாரை கையால் தாக்கி கொலை செய்து கை கால்களை கட்டி கிணற்றில் போட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ஓச்சலத்தைச் சேர்ந்த ராஜேஷை போலீசார் கைது செய்தன

RELATED ARTICLES

Recent News