பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி ஊராட்சியில் சாக்கடை கழிவு நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் சுகாதார சீர்கேடு நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் …
பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கற்பக விநாயகர் லே-அவுட், கந்தசாமி புரம் லே- அவுட், மின் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்
இந்தப் பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால் ஒரு வருட காலமாக சாக்கடை கழிவு நீர் சாலைகள், குடியிருப்புகளில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள்
பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்
சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கும் காரணத்தால் குடியிருப்பு வாசிகளுக்கு காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
அப்பகுதி மக்கள் கூறுகையில் பிரதான சாலை குடியிருப்பு பகுதியில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது
பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை எனவும்
அப்பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் அவ்வப்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருவதாகவும் எனவே உடனடியாக பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்…