மரங்களை வெட்ட வந்த நபர்களை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்…!!

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்
இந்த நிலையில் அங்குள்ள ஏரி அருகாமையில் பழமை வாய்ந்த விலை உயர்ந்த மரங்களை கிராம மக்கள் வளர்த்து வந்துள்ளனர் பட்டேரி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் எனவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் என்பவர் எந்தவித அறிவிப்பும் இன்றி முறையான டெண்டர் விடாமலும் தன்னிச்சையாக மரங்களை வெட்ட வெளிநபர்களுக்கு அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று காலை மரங்களை வெட்ட ஒரு கும்பல் வந்த போது அவர்களை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

மேலும் தமிழக அரசு மரங்களை வெட்ட முயலும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்

RELATED ARTICLES

Recent News