கோயமுத்தூரை சேர்ந்த ரோஹித் என்பவர் மெடிக்கல் ரெப்பாக பணியாற்றி வரும் நிலையில், இவர் கோயமுத்தூரில் இருந்து காரில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது, கார் இன்று (09) காலை திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த ஜமீன் பகுதியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் ரோஹித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கார் ஓட்டுநர் ஜீவா என்பவர் சிறுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளார், அதனை தொடர்ந்து இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் ரோஹித்தின் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இவ்விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..