நகை கொள்ளை..!! கைவரிசை காட்டிய AUNTY கைது..!!

சென்னை கோயம்பேடு அடுத்து நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்ற பெண் சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு சென்றுள்ளார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து பேருந்து மூலம் சென்னை வந்த அவர் வீட்டில் வந்து நான்கு சவர நகையை காணவில்லை என அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக கோயம்பேடு கே 10 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது விசாரணையில் வரட்சுமியின் அருகே பேருந்தில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் நகையை திருடியதே கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட பெண் திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி என்பது தெரியவந்துள்ளது அவரை கைது செய்து கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்

RELATED ARTICLES

Recent News