விஜயுடன் கூட்டணி வைக்க கூடாதா..? அவர் தலைமை தாங்க கூடாது என யாரும் விஜயை குறைத்து பேச வேண்டாம் – டிடிவி தினகரன்
மதுரை கோச்சடை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் NDA கூட்டணியில் இருந்தோம், நாடாளுமன்ற தேர்தல் வேறு சட்டமன்ற தேர்தல் வேறு என்பதால் வெளியேறி விட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
மூப்பனார் பெரிதும் மதிக்க கூடிய தலைவர், அவரது பிறந்த நாள் நிகழ்ச்சி இருப்பது பின்னர் தான் தெரியும் அதில் அனைவரும் கலந்து கொண்டதும் தெரியும், நான் யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தேன், அதற்கு யார் எதிராக உள்ளார்கள்., அவர்களோடு சேர்ந்துகொண்டு அப்படியெல்லாம் MP, எம்.எல்.ஏ ஆகும் கூட்டமல்ல நாங்கள். அவர்களோடு இருக்க விருப்பமில்லை அவரோடு சட்டமன்றத்திற்கு செல்லவும் விருப்பமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
NDA-வில் இருந்து வெளியேற காரணம் :
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இருந்தவரை கூட்டணியை சரியாக கையாண்டதாகவும், தற்போதைய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சரியாக கையாளவில்லை என்றும் தான் NDA வில் இருந்து வெளியேற யாரும் காரணமில்லை என சாடினார்.
முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என அமித்ஷா கூறியதை சுட்டிக்காட்டி, அமமுகவினர் அவரை எதிர்த்து தான் கட்சி தொடங்கியதாக டிடிவி தினகரன் மறைமுகம் சாடினார்.
“ரூம் போட்டுலாம் யோசிக்கல, தொண்டர்கள் தான் எனக்கு முக்கியம் என கேளி பேசினார். நயினார் காரணம் இல்லை எனவும் கூட்டணி அமைத்தவர்கள் காரணமில்லை, அவர்களுக்காக நாங்கள் தேவையில்லை என கூட நினைத்திருக்கலாம்..
கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய பாதிப்பை போல 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் பாதிப்பை ஏற்படுத்துவார் எனக்கூறினார். தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் உள்ள தலைவர்கள் யாரை வேண்டுமானாலும் தான் சந்திக்க உரிமை இருப்பதாகவும் விளம்பரத்திற்காக மட்டும் பூங்கொத்து கொடுக்கும் பழக்கம் இல்லை என விமர்சித்தார்.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்துடன்., அமமுக கூட்டணி வைக்குமா என்பது குறித்த கேள்விக்கு., கூட்டணி வைப்பது குறித்து கட்சி தலைமையகத்துடன் பேசி முடிவெடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
செங்கோட்டையன் குறித்து கேள்விக்கு :-
அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைவது அவருடைய கட்சிக்கு தான் நல்லது என்றும் அங்குள்ள தொண்டர்கள் அதனை யோசிக்கமால் செயல்படுவதாகவும், அம்மாவின் ஆட்சி அமைவது கடினம் என்றும் செங்கோட்டையன் இப்போது பேசுகிறார் என்கிறார்கள் ஆனால் இப்போது தான் செங்கோட்டையன் பேசவே ஆரம்பித்துள்ளார்.
ஆட்சி அமைக்க போற கூட்டணியில் நாங்கள் எப்போதும் இருப்போம், விவாத நிகழ்ச்சிகளில் எங்கள் மீது சிலர் நஞ்சை உமிழ்கிறார்கள்; பொறுமையாக இருங்கள் பல வாய்ப்புகள் உண்டு வெற்றிபெறும் கூட்டணியில் அமமுக எப்போதும் இருக்கும்..
நண்பர்கள் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும், ஸ்லிப்பர் செல்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறி விடுவார்கள் ஆனால் அண்ணன் தம்பிகளாக இருப்பவர்கள் ஒருபோதும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள்.
அமமுக NDAவில் இணையும் என்றும், அண்ணாமலை எங்களை கூட்டணிக்கு கொண்டு வந்தார. நயினார் நல்ல நண்பர் அண்ணாமலைக்கும் எனக்கும் நல்ல நட்பு எப்போதும் இருக்கும் என தெரிவித்தார்.
பன்னீர் செல்வம் விவகாரத்தில் மாநில தலைவர் பேசியது அப்பட்டமான பொய் என்றும், அவருக்கு நடந்தது தனக்கு நடக்க நீண்ட நாட்கள் ஆகாது என பேசினார்.
நான் எத்தனையோ ரெய்டு, கதை பார்த்து வந்தவன்; 20 ஆண்டுகள் சிறையில் இருந்தாலும் வெளியில் வந்து அரசியல் பண்ணுவேன், அண்ணாமலை என்னுடன் கூட்டணியில் வெளியேறியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும என பேசினார்.
இப்போது NDAவில் கூட்டணியில் நாங்கள் இருந்தால் பொறுந்தா கூட்டணியாக அமைந்துவிடும், கூட்டணியில் இருப்பது குறித்து புரிய வேண்டியவர்களுக்கு புரியும், எதற்காகவும், யாருக்காகவும் நான் அடி பணியமாட்டேன், நாங்கள் சேரும் கூட்டணி உறுதியாக ஆட்சியமைக்கும், அதில் முதல் தேர்வு NDA கூட்டணி தான், அதனை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் நல்ல முடிவு எடுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் :
அம்மாவின் தொண்டர்கள் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும், உங்களை அழைத்துக்கொண்டு சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய இயலும், தற்கொலை செய்துவிட்டா கொள்கையில் இருக்க முடியும்
செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி – நல்ல சீனியா், MGR கால மூத்த நிர்வாகி அவர் முயற்சி நல்ல முயற்சி அது வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன், தேவைப்பட்டால் அவருக்கு உதவியாக அம்மாவின் தொண்டர்கள் நாங்கள் இருப்போம்.
அம்மாவின் தொண்டர்கள் கையில் தான் முடிவு , இப்போதும் நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும், இப்போதும் அமைதி காத்தால் நல்லதல்ல என்றார்.
