“கெடுவான் கேடு நினைப்பான்” டிடிவி தினகரன் சாடல்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை விலக்கி வைத்திருப்பது அவருக்கு பின்னடைவல்ல அவரை நீக்கியவர்களுக்கே பின்னடைவு என டிடிவி தினகரன் சாடல்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் பி.கே.மூக்கையாத்தேவரின் 46வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன்,

செங்கோட்டையன் மூத்த தலைவர் அவர், கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் கிளைச் செயலாளராக அதிமுக கட்சியில் இருந்து விசுவாசத்தோடு உழைத்து வந்தவர்., கிளை செயலாளராக மட்டுமின்றி மாவட்ட செயலாளராக இருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் முன்னேறியுள்ள மூத்த தலைவர் செங்கோட்டையன் என்று பெருமை பேசினார்.

அதிமுகவில் ஏற்றத்தாழ்வுகள் இருந்த போதிலும் அம்மாவின் விசுவாசமாக இருந்தவர் செங்கோட்டையன். அப்படி இருந்த சிறந்த ஒரு மூத்த நிர்வாகியின் கோரிக்கையாக மட்டுமில்லாமல் தொண்டர்களின் கோரிக்கையிலே அவர் கூறியுள்ளார்.,

தொடர்ந்து பேசிய அவர், கெடுவான் கேடு நினைப்பான், வீனாசையே விபரீத புத்தி என்பார்களே அதை போல ஒரு டிரையல் நடத்தியுள்ளனர்., இது செங்கோட்டையனுக்கு பின்னடைவு அல்ல எடப்பாடிக்கு தான் பின்னடைவு என இவ்வாறே அவர் பேசியுள்ளளார்.

RELATED ARTICLES

Recent News