ஓசூரில் சமூக நீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!!

வாக்காளர் சேர்ப்பதில் முறைகேடு மற்றும் மக்கள் பிரதிநிதி பதவி இழப்பு புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓசூரில் சமூக நீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சமூக நீதி உரிமைகள் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் சார்பில், வாக்கு முறைகேடு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பதவி இழப்பு மசோதா ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராம் நகர் அண்ணா சிலை முன்பு, சமூக நீதி பாதுகாப்பு உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் நிறுவன தலைவர் கமா இளவரசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய முற்போக்கு தமிழர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் மக்கள் நீதி மையம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.

மத்திய பிஜேபி அரசு தேர்தல் ஆணையம் துணையுடன் வாக்காளர்களை சேர்ப்பதில் முறைகேடில் ஈடுபட்டு வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல தமிழ்நாட்டில் இந்தியர்கள் ஏராளமானோர் வாக்காளர் பட்டியலில் சேர்த்து 2026 சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு நடத்த திட்டமிட்டுள்ளது என குற்றம் சாட்டிய ஆர்ப்பாட்டத்தினர்,

30 நாட்கள் சிறை தண்டனை பெற்றாலே மக்கள் பிரதிநிதிகள் பதவி இழக்க வகை செய்யும் புதிய மசோதாவை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என தெரிவித்து முழக்கங்களை எழுப்பினார்கள்.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு எந்த வித உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தாமல் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதால், மாநகர உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்போது கோரிக்கை வைக்கப்பட்டது.

RELATED ARTICLES

Recent News