ஹிட் அடித்ததா காந்தி கண்ணாடி படம்..! படத்தின் வசூல்..?

சின்னத்திரை மூலம் திரையுலகில் அறிமுகமாகி., மக்கள் மனங்களில் இடம் பிடித்து., அதன் மூலம் வரும் பணத்தை அவர் பலருக்கும் உதவி செய்து வருகிறார்.. சின்னத்திரையில் மட்டுமே கலக்கி கொண்டிருந்த பாலா தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளப்படம் தான் காந்தி கண்ணாடி.

இப்படத்தின் கதை என்ன..? மக்கள் மனதில் பாலா கதாநாயகனாக இடம் பிடித்துவிட்டார் இல்லையா என்பதை இதில் பார்க்கலாம்..

தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருபவர் காந்தி (பாலாஜி சக்திவேல்). இவரின் மனைவி கண்ணம்மா (அர்ச்சனா) இவர்களுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் கடந்த நிலையில் அவர்களுக்கு குழந்தையில்லை.

ஆனால் காந்தி அதை சொல்லி கண்ணம்மாவை காயப்படுத்தாமல்., அவர் மீது அதிக காதலை வைக்கிறார்.
ஆனால் கண்ணம்மாவின் மனதிற்குள் ஒரு சோகம் இருக்க அதை உணரும் காந்தி., தனது மனைவியை சந்தோஷப்படுத்த 60வது கல்யாணத்தை திருவிழா போல கொண்டாட ஆசைப்படுகிறார்.

அதற்காக இவென்ட் பிளானரான கதிர் (கே.பி.ஒய். பாலா) வை சந்தித்து இது பற்றி பேசுகிறார்.
ரூ.52 லட்சம் செலவாகும் என கதிர் சொல்ல., தனக்கு சொந்தமான நிலத்தை விற்க முயற்சி செய்கிறார்.

பின்னர் பாலா உதவியோடு நிலத்தை ரூ. 80 லட்சத்திற்கு விற்பனை செய்கிறார். அப்போது தான் மத்திய அரசு பண மதிப்பிழப்பை அறிவிக்கிறது. இதனால் காந்தியின் கையில் உள்ள நோட்டுகள் அனைத்தும் செல்லா நோட்டுகளாக மாறிவிடுகிறது. இதனால் மனைவியின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என காந்தி தவிக்க., பாலாவிற்கும் காந்திக்கும் சண்டை ஏற்படுகிறது.

இவர்களின் நிலையை புறிந்து கொண்டு பாலா., 60வது கல்யாணத்தை நடத்தி வைக்கிறாரா..? பணம் என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை

படத்தின் சிறப்பு :

படத்தில் காந்தி கண்ணம்மாவின் காட்சிகள் காண்போரை பீல் பண்ண வைக்கிறது., வயதானாலும் கணவன் மனைவிக்கு இடையே காதல் ஒன்று இருந்தால் போதும் என்பதை அழகாக சொல்லியிருக்காரு இயக்குனர். குக் வித் கோமாளி., கே.பி.ஒய் போன்ற நிகழ்ச்சிகளில் மக்களை சிரிக்க வைத்த பாலா இதில் சீரியஸாக நடித்திருப்பது மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

அப்போ பாலாவிற்கு இதில் காதல் காட்சிகள் கொடுக்க வில்லையா என பார்த்தல்.,

ஹீரோயின் நமிதா கிருஷ்ணமூர்த்தி நடிப்பு அருமையாக இருந்தாலும்., காதல் சீன்கள் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது நாம் சாதாரணமாக பார்க்கும் ஒரு காதல் கதை என சொல்லலாம்.

ஆனால் காந்தி கண்ணாடியில் அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்பதாக சொல்லி ஓவர் டோஸ் செய்துவிட்ட ஃபீல் இருக்கிறது. ஆனால் இதை 2கே கிட்ஸ்கள் பார்வையில் கிரிஞ்ச் படம் போல தெரியுமே தவிர, காதல் படமாக தெரியாது.

பாலா தொடர்ந்து சீரியஸான கேரக்டரில் நடிக்காமல் காமெடி பக்கம் சென்றால் பெரியதிரையில் அவரின் பயணம் சமூகமாக இருக்கும் என்று விமர்சனம் எழுந்திருக்கிறது.

எப்படி இருந்தாலும் பாலாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.. நேற்று ஒரே நாளில் மட்டுமே 25 லட்சம் வசூல் சாதனை படைத்துள்ளது..

RELATED ARTICLES

Recent News