நடிகர் சிவகார்த்திகேயன், மோகன்லால், ருக்மணி வசந்த், வித்யுத், பிஜுமேனன், ஷபீர் கள்ளரக்கள், விக்ரந்த் மற்றும் முர்னால் தாகூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நேற்று வெளியான படம் தான் “மதராஸி”.
தளபதி விஜயிடம் இருந்து துப்பாக்கியை கையில் வாங்கிய சிவகார்த்திகேயன்., பிரபல இயக்குனருடன் இணைந்து இதில் நடித்துள்ளார்., இப்படத்தில் துப்பாக்கி விளையாடியுள்ளது என்றாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மதராஸி நிறைவேற்றியுள்ளதா என்பதை இதில் பார்க்கலாம்.
தமிழகத்தில் துப்பாக்கியை வைத்து வன்முறையை தூண்டி நாட்டை சின்னா பின்னமாக்க வடமாநில கும்பல் 5 கன்டெயினரில் வருகிறது.. இந்த கும்பலை தடுத்து நிறுத்துவதற்காக அரசாங்கத்தின் NIA-வை சேர்ந்த பிஜு மேனன், விக்ராந்த் மற்றும் அவர்களின் குழு உள்ளே வருகிறார்கள். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட பிஜு மேனன் காயம் ஏற்பட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
அதில் ஒரே ஒரு கன்டெய்னரை NIA தடுத்து நிறுத்த மற்ற நான்கு கன்டெய்னர்களும் தமிழ்நாட்டிற்குள் வந்துவிடுகிறது.
இப்போதான் நம்ப ஹீரோ சிவகார்த்திகேயன் என்ட்ரி ஆகிறார்.,
ஒரு பக்கம் வில்லனுக்கும் – NIA-வுக்கும் தீவிர சண்டை காட்சிகள் அரங்கேறி கொண்டிருக்க மறுபக்கம் காதல் தோல்வியால் சுற்றிக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அப்போ தான் சலம்பல பாடலும் ஒளிபரப்ப படுகிறது.
ஹீரோயின் ருக்மிணி பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத சிவா., தற்கொலை செய்து கொள்ளவதற்காக பாலத்தின் மீது இருந்து கீழே குதிக்க அவருக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதாவது NIA அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டுள்ள அதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது பிஜு மேனனுக்கும்., சிவாவிற்கு நட்பு ஏற்படுகிறது. இந்த Gap-ல் மீதம் இருந்த 4 கன்டெயினர்களும் ஒரு Gas Factory-ல் இருப்பதை பிஜு கண்டுபிடித்து விட அந்த Factory-யை எப்படியாவது வெடிக்க வைத்து விட்டால், இந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும் என எண்ணுகிறார்.
அதற்காக சிவகார்த்திகேயனை உள்ளே அனுப்பி வைக்க முடிவு செய்கிறார்., அதாவது சிவாவை தன்னுடைய சுயநலத்திற்காக அடகு வைக்கிறார் பிஜு., சிவகார்த்திகேயன் எப்படியாவது சாக வேண்டும் என எண்ணி., அந்த Factory-க்குள் அனுப்பி வைக்க., இவரை காப்பாற்றபிரிந்து சென்ற முன்னாள் காதலி ருக்மிணி வருகிறார்.
சிவாவின் காதல் தோல்விக்கு காரணம் என்ன..? அந்த factory-க்குள் சிவாவிற்கு என்ன ஆனது..? மீண்டும் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.
படத்தின் சிறப்பு :
காதல் காட்சிகள்., இதில் நடித்த அனைவரின் நடிப்பும் பாராட்டிற்குரியது., இடைவேளைக்கு முன் எடுக்கப்பட்ட காட்சிகள்
படத்தில் பிடிக்காது :
அனிருத்தின் சில சொதப்பல் இசை, எடிட்டர் கட், சுவாரஸ்யம் இல்லாத ஒரு சில காட்சிகள்..
மதராஸியில் துப்பாக்கி விளையாடி இருந்தாலும்., படம் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை என ரசிகர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது..
முதல் நாளிலேயே படம் 10கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டதும் சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்று சொல்லலாம்..