கல்லூரிகளில் களைகட்டிய ஓணம் பண்டிகை…!!!

சேலத்தில் கல்லூரிகளில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது . இதில் மாணவ மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர். ஓணம் கொண்டாட்டத்தில் கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.

கேரளாவில் மிகச் சிறப்பாக கொண்டாடும் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்கள் நடைபெறும். கேரளாவில் கொண்டாடப்படும் திருவோண பண்டிகை மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக கொண்டாடப்படுகிறது

ஒவ்வொரு வீடுகளிலும் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக பல வண்ண மலர்களால் ஆன அத்தப் பூ கோலம் வரைந்து குத்து விளக்கு ஏற்றி வழிபட்டு கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிலையில் நாளைய தினம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது
அதனை முன்னிட்டு சேலம் அரியானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை திருநாள் கொண்டாடப்பட்டது

இதில் மாணவ மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து
கேரள பாரம்பரிய செண்டை மேளம் அடித்து நடனமான திருவாதிரா நடனத்தை ஆடி அசத்தினர் தொடர்ந்து பல்வேறு திரை இசை பாடலுக்கு நடனமாடி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்

தொடர்ந்து மாணவர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி பாரம்பரிய பானை உடைக்கும் போட்டியும் நடைபெற்றது . இதில் கண்களை கட்டிக்கொண்டு மாணவ மாணவிகள் பானையை உடைக்க முயற்சி செய்த நிகழ்வு அனைவரையும் நகைப்புக்கு உள்ளாகியது. தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஓனம் திருநாள் பண்டிகை வாழ்த்து தெரிவித்து கொண்டனர். கேரள பாரம்பரிய உணவுகளும் வழங்கப்பட்டது.

இதேபோல சேலம் மாநகர பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கலை கட்டியது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News