பள்ளப்பட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை மனிதர்களாக நடத்துங்கள் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்கம் கூட்டம் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்கம் கூட்டம் நடைபெற்றது.
இதில் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நேரம் வேலையாக காலை ஆறு மணி முதல் 2 மணி வரை வழங்க வேண்டும், குழந்தைகள் மலக்கழிவு பொருட்களை பொது குப்பைகளோடு கொடுப்பதை நகராட்சி நிர்வாகம் தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
பழுதடைந்த நகராட்சி குப்பை அள்ளும் வாகனங்களை சரி செய்து வழங்கப்பட வேண்டும் தூய்மை பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் பணி தவற இதர வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது, தூய்மை பணியாளர்களை தரை குறைவாக பேசுவதை கைவிட வேண்டும், எனவும் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த 760 ஊதியமாக வழங்க வேண்டும்,
ஊதியத்தில் பிடித்த விபரங்களை அறிய சம்பள ரசீது வழங்கிட வேண்டும்,
அவசியமான உடல்நிலை காரணங்களுக்காக விடுப்பு எடுத்து வேலைக்கு திரும்பும் போது வேலைக்கு அனுமதிக்காமல் அலைக்கழிக்க கூடாது.
தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் இ.எஸ்.ஐ முறையாக செலுத்தப்பட்ட கணக்கு விபரம் அளிக்கப்பட வேண்டும். மாத ஊதியம் பிரதி மாதம் ஐந்தாம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும். தூய்மைப் பணிக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும்.
உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.