ஐயா வைகுண்டரை அவமதிப்பதா..? TNPSC-க்கு பாஜக அண்ணாமலை கண்டனம்..!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த TNPSC தேர்வில் முடிசூடும் பெருமாள் என்ற வைகுண்டரின் பெயரை, “the god of hair cutting” என்று மொழி பெயர்கப்பட்டிருந்து இதனை குற்றம்சாட்டி பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்., இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற TNPSC தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியான முடிசூடும் பெருமாள் என்ற வைகுண்டரின் பெயரை, “the god of hair cutting” என்று ஆங்கில மொழிபெயர்ப்பில் தவறுதலாக குறிப்பிட்டியிருப்பதை சுட்டிக்காட்டி

பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை, இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது, கடுமையான கண்டனத்துக்குரியது என காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என கேள்விக்கு, “2024 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது என்ற கேள்வியில்
“It Begged the United Nations award” என்று அதாவது பிச்சை எடுத்தார்கள் என்று கொடுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்..

மேலும் அரசுப் பணி தேர்வுகளுக்கான கேள்விகளைத் தயார் செய்யும்பட்சத்தில்., இவ்வளவு கவனக்குறைவா என கேள்வி எழுப்பியுள்ளார்., மேலும் திமுக அரசு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை எத்தனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது., அரசுப் பணித் தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் எண்ணத்தை திமுக அரசு மாற்றிக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News