திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் இராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் கருத்து கேட்பது தொடர்பாக இன்று முக்கிய நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினர்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கு அன்புமணி ராமதாசுக்கும் கருத்து மோதல் கடந்த சில நாட்களாக இருந்து வருகிற இந்நிலையில் அன்புமணி ராமதாசை தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு செயல்தலைவராக ராமதாஸ் அறிவித்தார். அந்த பதவியை அன்புமணி ஏற்காமல் தான் தலைவராக செயல்படுவேன் என அறிவித்து கடந்த 9 ஆம் தேதி அன்புமணி பாமக பொதுக்குழுவை கூட்டி ஒரு வருடத்திற்கு தலைவராக செயல்படுவார் என அறிவித்தார்.
அதன் பிறகு 17 ஆம் தேதி பட்டானூரில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டபட்டு பாமகவின் நிறுவனர் தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டார். அந்த பொதுக்குழு மேடையிலையே அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகளை ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்தது.
தைலாபுரம் இல்லத்தில் 19 ஆம் தேதி கூடிய ஒழுங்கு நடவடிக்கை குழு , அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு 31ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர் தற்போது வரை அந்த நோட்டீஸிற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்காததால் இதன் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஒன்பது பேர் கலந்து கொண்டனர் மேலும் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை நோட்டீஸ் மூலம் ராமதாஸிற்கு சீலிட்டு அனுப்பினர் மேலும் இறுதி முடிவை ராமதாஸ் தான் அறிவிப்பார் என அருள் நேற்று பேட்டி அளித்தார்.
இந்த நிலையில் இன்று அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் கருத்து கேட்டு தற்போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ், மற்றும் அவரது மூத்த மகள் மாநில நிர்வாக குழு காந்திமதி பரசுராமன் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்பொழுது மருத்துவர் ராமதாஸ் பேசுகையில் என் உயிர் மூச்சு உள்ளவரை நான் நியமித்த மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் நிரந்தரமானவர்களாக அறிவிக்கப்படுவார்கள் எதையும் பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் புதிய நிர்வாகிகள் சேர்ப்பதற்கு எவ்வளவு கால அவகாசம் வேண்டும்
ஒவ்வொருவரும் குறிப்பிட்ட காலத்திற்குள் உறுப்பினர் சேர்க்கை நடைபெற வேண்டும் எனவும் மாவட்ட தலைவர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தினர் இதில் கௌரவத் தலைவர் ஜிகே மணி, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் தீரன், பொதுச் செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையது மன்சூர் உசேன், வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள்மொழி தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ஆசிரியர் சங்க நிர்வாகி பரந்தாமன், உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் கலந்துகொண்டனர்