தமிழக அரசின் மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டதாக அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது., உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிழ் ஆளுநருக்கு உத்தரவிடக் கோரும் தமிழ்நாடு அரசின் ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தீர்ப்பு அளித்தது
அதில் ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும்., முடிவுகள் எடுக்கப்படாத நிலையில்., மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்திருந்தது
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் ஆலோசனை கருத்தை பெறும் வகையில் குடியரசு தலைவர் தரப்பில் 14 கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. அது தொடர்பான மனுவை தலைமை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துருக்கர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் விசாரணை செய்யப்பட்டது.
அப்போது தமிழக அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்., ஆளுநர் திருப்பி அனுப்பும் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் உரிமை சட்டப்பேரவைக்கு உள்ளது என்றும்., அவை மாறும் பட்சத்தில் கைவிடும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு உள்ளது என்றும்., திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
மேலும் ஆட்சி மாற்றம் அல்லது கொள்கை மாற்றம் என்ற காரணங்களை முன்வைத்து., ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போடுவது ஏற்புடையதல்ல என்றும்., அதனை நிறுத்தும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக எந்த மசோதா மீதும் ஆளுநர் தனிப்பட்ட காரணங்களை காண்பித்து முடிவெடுக்க முடியாது என்றும், தன்னை முதலமைச்சரை போல நினைத்துக்கொண்டு செயல்படும் அதிகாரமும் ஆளுநருக்கு இல்லை என கூறியுள்ளார்.
ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்தாலே அது செயலிழந்ததாகவும், உயிரற்றதாகவும் ஆகிவிட்டது என கூறும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் இவ்வாறே வாதிட்டுள்ளார்,
அதே நேரத்தில், சட்டப்பேரவை கூடாத நேரத்தில் அமைச்சரவையின் ஆலோசனைப்படி அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..