சிறைபிடிக்கப்பட்ட அரசு பேருந்து..! கடும் அதிருப்தியில் மாணவர்கள்..!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த இம்மிடிபாளையம் கிராமத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் மாணவர்கள்., மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்

இந்நிலையில் கிணத்துக்கடவு, தேவரடி பாளையம் , இம்மிடிபாளையம், கல்லாபுரம் வழியாக இயக்கப்பட்டு வரும் பேருந்து., வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் இம்மிட்டிப்பாளையம், கல்லாபுரம், தேவரடிபாளையம் கிராமங்களில் உள்ள மாணவர்கள், பணிக்கு செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக தேவரடி பாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கு, இம்மிடிபாளையத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

காலை குறித்த நேரத்தில் இந்த பேருந்து இயக்கப்படாததால், மாணவர்கள் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வருகின்றனர். மேலும் பொள்ளாச்சி, கோவைக்கு பணிக்கு செல்பவர்களும், பேருந்து இல்லாததால் வாடகை ஆட்டோவில் சென்று வருகின்றனர். இதனால் தேவரடிபாளையம், இம்மிடிபாளையம் மற்றும் கல்லாபுரம் பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனால் இன்று காலை 8 மணிக்கு இம்மிடிப்பாளையம் வந்த அரசு பேருந்தை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என 50 க்கும் மேற்பட்டவர்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கிணத்துக்கடவு போலீஸார்., பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு அருகே இம்மிடிபாளையத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு பேருந்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

RELATED ARTICLES

Recent News