14 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் கட்டாயம் அளித்திருக்க வேண்டுமென மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு கட்டாய கல்விப்போல் அவர்களுக்கு கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என கொண்டுவந்துள்ளது.
அதாவது., இச்சட்டத்தின் கீழ் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பணியில் சேரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம் என மத்திய அரசு கூறியிருந்தது.
மேலும் உச்சநீதிமன்றம் இந்திய சட்டத்தில் இல்லாத ஒரு அம்சத்தை இணைத்து 142-வது சிறப்பு பிரிவை பயன்படுத்தி தீர்ப்பு அளித்திருப்பது கடும் அதிருப்தியையும்., அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறுகையில்., தகுதித்தேர்வு கட்டாயம் ஏற்புடையதல்ல என்றும்., உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசு இவ்வழக்கை மேல்முறையீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். முதுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருவதால் இந்த தகுதிதேர்வு அவர்களுக்கு கட்டாயம் இல்லை என விளக்கம் அளித்தனர்.
தமிழகத்தில் மட்டும் அரசு தொடக்கப்பள்ளிகளில் 62 ஆயிரத்து 979 ஆசிரியர்களும், நடுநிலைப்பள்ளியில் 49,547 ஆசிரியர்களும், உயர்நிலைப்பள்ளியில் 31,531 ஆசிரியர்களும் மேல்நிலை பள்ளியில் 82,033க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 4 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில்., 1.45 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டும் தகுதியானவர்கள் எனக்கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என வேதனை தெரிவித்தனர்.