குப்பையில் கிடந்த தங்க மோதிரம். உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்..!!

குப்பையில் கிடந்த தங்க மோதிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளரின் நேர்மையை பாராட்டி வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தனது சொந்த பணம் ரூ.25 ஆயிரம் மற்றும் பட்டு வேட்டி சட்டைகள் சேலைகள் வழங்கி தூய்மை பணியாளரின் நேர்மையை பாராட்டினார் .

வேலூர் மாவட்டம்,வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது மண்டலம் 37 ஆவது வார்டு ஓல்டு டவுன் பகுதியில் உள்ள தோல் கிடங்கு மெயின் ரோடு பகுதியில் நேற்று மாநகராட்சியின் தூய்மை பணியாளர் சேண்பாக்கத்தை சேர்ந்த நவீன் (31) என்பவர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார்.

வீட்டிலிருந்து ஒப்படைத்தவர்களின் குப்பைகளை தரம் பிரிக்கும் போது அதில் அரை சவரன் தங்க மோதிரம் இருந்துள்ளது. இதுகுறித்து அவருடைய உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.பின்னர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்ட போது நகையை தவறவிட்டது தோல்கிடங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த உஷா என்பதும், அவர்கள் நகையை தேடி வந்ததும் தெரியவந்து.

அரை சவரன் தங்க மோதிரத்தை உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனைப் பெற்றுக் கொண்ட பெண்மணி தூய்மை பணியாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளரின் இச்செயலை பாராட்டி வேலூர் மாநகராட்சி பழைய அலுவலக வளாகத்தில் உள்ள வேலூர் எம்பி அலுவலகத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தூய்மை பணியாளர் நவீனை நேரில் அழைத்து அவரின் நேர்மையை பாராட்டி தனது சொந்த பணம் ரூ.25 ஆயிரம் மற்றும் பட்டு வேட்டி பட்டு சேலைகள் பழங்கள் அடங்கிய பொக்கோ ஆகியவைகளை வழங்கி பாராட்டினார்

பின்னர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர் பணியில் சரியாக இருப்பதில்லை மருத்துவமனையின் முதல்வர் பணியில் சரியாக செயல்படுவதில்லை இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவணத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன் முதல்வர் கிராமங்கள் தோறும் நடத்தும் மருத்துவ முகாம்களில் ஏராளமான கிராமப்புற மக்கள் பயனடைகின்றனர் அங்கேயே ரத்த பரிசோதனைகள் செய்கின்றனர்

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரச்சணை இருந்தால் முதல்வர் கவணத்திற்கும் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கபடும் ரெட்டி தோப்பு பாலம் ஒரு பிரிட்ஜ் கட்ட வேண்டி உள்ளது எ.வ.,வேலு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் சட்டமன்றத்தில் அதற்கான பணிகளும் நடந்து வருகிறது

வாணியம்பாடி மேம்பாலத்தில் இரட்டை டியூப்பலர் காளம் அமைக்க டெண்டர் போடப்பட்டுள்ளது பூமி பூஜை போட்டு. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் லத்தேரி சந்திப்பு நீண்ட நாள் பிரச்சணைக்கும் பாக்ஸ் கல்வெட்டு போட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது விரைவில் அதனை பயன்பாட்டிற்கு எதிர்ப்பார்க்கலாம்

வேலூர் விமானம் நிலையம் ஒரு சுற்றுசுவர் காம்பவுண்டால் தாமதமானது அதிலும் டெண்டர் விடப்பட்டுள்ளது ஆனால் சுனக்கம் ஏற்பட்டுள்ளது இது தொடர்பாக ராம் மோகன் நாயுடு மத்திய அமைச்சரிடம் பேசியுள்ளேன் அதனை இந்த வருடத்திற்குள் திறப்போம் என கூறினார்

RELATED ARTICLES

Recent News