மஞ்சள் நிறமாக வரும் குடிநீர் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

புதுச்சேரியில் மஞ்சள் நிறம் கலந்த குடிநீர் விநியோகம் செய்வதை கண்டித்து குடிநீர் கேனுடன் பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரியை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது

புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதிக்கு உட்பட்ட தேங்காய் திட்டு, புதுநகர், நேரு நகர், வசந்தம் நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் மஞ்சள் நிறமாக வருவதாகவும், இதனால் பல்வேறு தொற்று நோய் ஏற்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

ஆனால் அதன் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை மேலும் தொடர்ந்து குடிநீர் மஞ்சள் நிறமாக வருவதால் சமைக்க முடியாமல் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்கள் மஞ்சள் நிறமாக வரும் குடிநீர் கேனுடன் பொதுப்பணித்துறை குடிநீர் கோட்டு அலுவலக அதிகாரியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் கேனை அதிகாரி டேபிள் மீது வைத்து கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

இதனை அடுத்து உடனடியாக குடிநீர் சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து அவர்கள் கூறும் பொழுது…

மஞ்சள் நிறமாக வரும் குடிநீர் குடிப்பதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது சமைக்க முடியவில்லை துணி துவைக்க முடியவில்லை எனவே உடனடியாக சரி செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.

RELATED ARTICLES

Recent News