கரூர் அருகே தண்ணீர் வரவில்லை என கேட்கச் சென்றவரை தாக்கிய கவுன்லர்…!!

கரூர் அருகே தண்ணீர் வரவில்லை என கேட்கச் சென்றவரை தாக்கிய கவுன்லர்.. தாக்குதலுக்குள்ளானவரை நடிகை அம்பிகா சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகழூர் 4 ரோடு நாடார் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 61). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி சித்ரா (வயது 59). புகழூர் தட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நவாஸ்கான் (வயது 45). இவரது மனைவி சபீனா, புகழூர் நகராட்சி 15 வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இந்நிலையில் ரவி என்பவர் சபீனாவின் கணவர் நவஸ்கானிடம் தங்களது பகுதிக்கு கடந்த 12 நாட்களாக தண்ணீர் வரவில்லை என அவரது வீட்டிற்கு கடந்த 17ம் தேதி சென்று கேட்டதாக சொல்லப்படுகிறது.

அதற்கு நவாஸ்கான் என்னையே கேள்வி கேட்கிறாயா என்று கூறி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் நவாஸ்கான், அவரது மாமனார் ஜான் பாட்சா, நவாஸ்கானின் நண்பர் மணிகண்டன் மூன்று பேரும் சேர்ந்து ரவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.அதை தடுக்கச் சென்ற ரவியின் மனைவி சித்ராவையும் தாக்கியுள்ளனர் .

தாக்குதலில் காயமடைந்த ரவி மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இது குறித்து ரவி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் 15வது வார்டு கவுன்சிலர் சுபாஷினியின் கணவர் நவாஸ் கான், மாமனார் ஜான்பாட்சா, நவாஸ்கானின் நண்பர் மணிகண்டன் ஆகிய மூன்று பேர் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுதல், கொலை முயற்சி, பெண்களை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதியம் அவரது வீட்டிற்கு நடிகை அம்பிகா வருகை தந்தார். படுக்கையில் படுத்திருந்த ரவிக்கு ஆறுதல் தெரிவித்தார். அவர் தனது ரசிகர் என தெரிந்தவுடன், நன்றாக இருங்கள், எனது ஷோக்களை பாருங்கள் என அன்புடன் பேசினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அம்பிகா, கோவில் செல்வதற்காக எங்கள் குடும்ப நண்பர் வீட்டிற்கு கரூர் வந்ததாகவும், ஏற்கனவே சோஷியல் மீடியாவில் இந்த வீடியோ பார்த்தால் அவர்களை நேரில் பார்க்க வந்ததாக தெரிவித்தார்.

தண்ணீர் வரவில்லை எனக் கூறியதற்காக தாக்கப்படுவது மனிதாபிமானமற்ற செயல் என்றும், தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். FIR போட்டால் மட்டும் பத்தாது என்றார்.

RELATED ARTICLES

Recent News