காவல் துறையினரால் 574 கிலோ கஞ்சாவை மருத்துவ கழிவுகள் அழிக்கப்படும் தனியார் ஆலையில் தீமூட்டி அழிக்கப்பட்டது..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 574 கிலோ கஞ்சாவை மருத்துவ கழிவுகள் அழிக்கப்படும் தனியார் ஆலையில் தீமூட்டி அழிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கோணமேரி பகுதியில் மருத்துவ கழிவுகளை அழிக்கும் தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது.

அங்கு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 574 கிலோ கஞ்சாவை
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் தீமூட்டி அழிக்கப்பட்டது.

அப்போது சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், நாமக்கல் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் தங்கராஜ், சேலம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் கார்த்திகேயன்,
நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் சங்கரபாண்டியன், சங்ககிரி காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

RELATED ARTICLES

Recent News