தவெக தலைவர் விஜய்க்கு இடியை இறக்கும் செய்தி…!!

தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜயுடன் வந்த பவுன்சர்கள், தொண்டர் ஒருவரை தூக்கி வீசிய விவாகரத்தில், புகார் கொடுத்துள்ள சரத்குமார் என்பவர் அந்த இடத்திலேயே இல்லை எனவும் இந்த புகார் கட்சியின் வளர்ச்சி மற்றும் விஜயை பிடிக்காதவர்கள் தூண்டி விட்டு புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இது முழுக்க முழுக்க பொய்யான புகார் எனவும் தமிழக வெற்றி கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றி கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் கடந்த சில தினங்களாக ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. மதுரை மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவரை தூக்கி போட்டதாக செய்தி வருகிறது. உண்மையில் தூக்கி போட்டது இந்த பையனை கிடையாது. இந்த பையன் அந்த இடத்திற்கு வரவும் இல்லை. சரத்குமாரின் அம்மா பேட்டியை பார்த்து விட்டு சரத்குமாரிடம் அது பற்றி கேட்ட போது அது நான் இல்லை என்றும், அங்கு நான் செல்லவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் எனது சட்டையை பார்த்து விட்டு யாரோ சொன்னதைக் கேட்டு எனது அம்மா அவ்வாறு பேட்டி கொடுத்துள்ளார் என்று என்னிடம் போனில் தெரிவித்தார். நான் அவரிடம் உனக்கு ஏதேனும் உடல் ரீதியாக பிரச்சனை இருக்கிறதா என்று கேட்ட பொழுது அப்படி எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்தார். தற்போது யாருடைய தூண்டுதலின் பேரிலோ தெரியவில்லை அந்த சரத்குமார் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். நாங்கள் 100% சொல்கிறோம் பவுன்சர்கள் தூக்கி போட்டது இந்த பையன் இல்லை. இது ஒரு தவறான தகவல் யாருடைய தூண்டுதலின் பேரிலே இப்படி புகார் கொடுக்கப்பட்டு, எங்கள் கட்சித் தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாராக இருந்தாலும் தூக்கி வீசப்பட்டவர் ஒரு தொண்டர் தானே அவரை அப்படி தூக்கி வீசலாமா என்று கேட்டதற்கு…?

பாதுகாப்பிற்காக பவுன்சர்கள் தள்ளிதான் விட்டார்கள் தூக்கி வீச கிடையாது. பாதுகாப்பு வளையத்திற்குள் வருவது தவறு அல்லவா. எந்த தலைவராக இருந்தாலும் பாதுகாப்பு என்பது முக்கியம். ரசிகர் என்ற முறையில் அதை தாண்டி அவர்கள் வந்து விட்டார்கள். அவர்களை பவுன்சர்கள் தடுக்கிறார்கள். யாரையும் தூக்கி போடவில்லை தள்ளி விடும்போது அவர் கம்பியை பிடித்து இறங்கி வருகிறார். உண்மையில் இந்தத் தொண்டர் அவர் கிடையாது. கீழே விழுந்தவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அஜய் என்பவர் அவரும் பேட்டி கொடுத்துள்ளார். நான் தவறுதலாக அந்த இடத்திற்கு சென்று விட்டேன், நான் சென்றது தவறுதான், நான் போய் இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மாநாட்டுக்கு சரத்குமார் இரண்டாவது நாள் தான் சென்றதாக கூறினார். முதல் நாள் சென்றவர்கள் மட்டுமே நடைமேடை அருகே செல்ல முடியும் காரணம் கூட்டம் அதிகமாக இருந்தது. இவர் தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார். கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் இதுபோன்று செய்கிறார்கள். சரத்குமாரின் அம்மா பேட்டி கொடுத்தவுடன் உடனடியாக அந்த பையனை நான் தொடர்பு கொண்டேன் அதற்கான ஆடியோ பதிவு என்னிடம் உள்ளது. அப்போது அது நான் இல்லை வேறு யாருடைய தூண்டுதலின் பேரில் எங்க அம்மா அவ்வாறு பேட்டி கொடுத்துள்ளார் என்று கூறினார். சரத்குமார் போட்டிருப்பதைப் போல ஏராளமான சட்டைகள் உள்ளது எனவே சட்டையை வைத்து முடிவுக்கு வர முடியாது. அதுமட்டுமின்றி கீழே விழுந்தவருக்கும் புகார் கொடுத்தவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. கட்சியின் வளர்ச்சி விஜயை பிடிக்காதவர்கள் இதனை தூண்டி விடுகிறார்கள். முழுக்க முழுக்க பொய்யான புகார் கொடுத்துள்ளார். எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய்யான வழக்கு அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். மேலும் அந்த தொண்டர் மீது புகார் கொடுக்க வாய்ப்புள்ளதா என்ற போது அது கட்சி தலைமையின் ஒப்புதலை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதன் பின்னணியில் இருப்பவர்கள் தளபதியினுடைய வளர்ச்சியை பிடிக்காதவர்கள் தற்போது உள்ள ஆளுங்கட்சி தான், அவர்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News