மேலூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் வரும் 02ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு
மதுரை மாவட்டம் மேலூரில் வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் தேதி தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
இதனையொட்டி, அதிமுக மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன்செல்லப்பா தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ராஜ்சத்தியன், மதுரை கிழக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து, மேலூர் மற்றும் மதுரை பகுதியில் பரப்புரை மேற்கொள்ள உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெருந்திரளாக கலந்துக் கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற இப்போதிலிருந்து தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்ள உள்ள மேலூர் பேருந்து நிலையம் பகுதியில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ராஜன் செல்லப்பா ஆய்வு மேற்கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.